தமிழ் முஸ்லிம்கள் கூடுமிடம்

எது பெண்ணுரிமை?-3
பர்தாவால் ஏற்படும் நன்மைகள்

முழு அளவு உடலை மூடப்பட வேண்டியவள் பெண். இதற்குக் காரணம், அவளது அழகும் கவர்ச்சியுமாகும். ஆண்களுக்கு காம உணர்ச்சி ஏற்பட நேரம்-காலம் என்ற வரையறை எதுவும் கிடையாது. அவன் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் காம உணர்வுக்கு ஆளாகிவிடலாம். அவனது உடல்வாகும் படைப்பும் அப்படி அமைந்துள்ளது. அவன் எளிதில் உணர்ச்சிவசப்படுவான். இந்த உணர்ச்சியை அடக்கிக்கொள்ள பெண்களைத் தேடி அலைவான். ஏழு வயது சிறுமிகூட பாலியல் பலாத்காரத்திற்கு இறையாகிறாள் என்ற குற்றப் பட்டியல்கள் தரும் ஆதாரங்கள் ஆண்களின் காமப் பசியின் எல்லையைத் தெளிவாகக் காட்டுகின்றன.

நிலமை இவ்வளவு மோசமாக இருக்கும்போது. ஒரு பெண் தனது அங்கங்களை ஆடவர்களின் கண்களுக்கு விருந்தாக ஆக்கிக்கொண்டு வெளிப்பட்டால் நிலமை என்னவாகும்? தனியாக விவரித்துச் சொல்லத் தேவையில்லாத அளவிற்கு இன்றைய நடைமுறை இருக்கின்றன. ஆண்களின் அந்த வெறித்தனத்திற்குப் பிறகு பெண்களுக்கு வாழ்வா? சாவா? என்ற கேள்விக்குறி மனத்திரையை ஆக்கிரமிப்பு செய்கின்றன. பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்ட பிறகு சிலர் அதையே தொழிலாக்கி, உடல் வியாபாரிகளாக ஆகிவிடுகிறார்கள். மற்ற சிலர் மனநிலை பாதிக்கப் பட்டவர்களாகவும், பைத்தியங்களாகவும் அலைகிறார்கள். இன்னும் சிலர் தற்கொலைகளால் தம் வாழ்க்கையையே முடித்துக்கொள்கிறார்கள்.

இப்படிப்பட்ட விளைவுகள் ஏற்படுவதற்குக் காரணம்... பெண்களின் உடல். அந்த உடலை மறைக்க வேண்டிய முறையில் மறைக்காமல் வெளியில் செல்வதால் ஏற்படும் அபாயம், பெண்களுக்கு ஏற்படும் இவ்வவளவு பாதிப்புகளையும் கட்டுப்படுத்தும் ஒரு சக்தி இருக்கிறதென்றால் அது மாதர் சங்கங்களோ, மகளிர் மன்றங்களோ, சாசன சட்டங்களோ அல்ல. அது 'பார்தா' ஒன்றுதான். பெண்களுக்கு பர்தாவாவல் ஏற்படும் மிகப் பெரிய நன்மை இதுதான் என்பதை நடுநிலையோடு அணுகும் எந்த ஆய்வாளனும் மறுக்க மாட்டான்.

இதைத்தான் குர்ஆனும் கூறுகிறது
நபியே! நம்பிக்கைக் கொண்ட பெண்களுக்கு நீர் கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வைகளைக் கீழ்நோக்கி வைத்துக்கொள்ளட்டும். இன்னும் தங்களது வெட்கத்தலங்களையும் மறைத்துப் பாதுகாத்து வரட்டும். தங்கள் இயற்கை அழகிலிருந்து தெரியக்கூடிய(முகம் மற்றும் கைகளின் முன் பகுதிகளை)த் தவிர வெளியில் காட்டலாகாது. (அல்குர்ஆன் - 24:31)

நபியே! நீர் உம் மணைவியர்களுக்கும், உம் பெண் மக்களுக்கும், நம்பிக்கைக்கொண்ட பெண்களுக்கும் அவர்கள் தங்கள் தலை முந்தானைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு கூறுவீராக! அவர்கள் அறியப்பட்டு நோவினை செய்யாமலிருக்க இது சுலபமான வழியாகும். (அல்குர்ஆன் - 33:59)

பர்தாவைப் பற்றி சில குடும்பத் தலைவிகளை அணுகி விசாரித்தோம். அனைவரும் ஒரே குரலில் ''பர்தா மானத்தைக் காக்கும் கேடயம் - அழகைப் பாதுகாக்கும் அரண்' என்ற பதிலைத்தான் சொன்னார்கள். ஒரு குடும்பத் தலைவி வித்தியாசமான அனுபவ ரீதியான ஒரு கருத்தைச் சொன்னார்.

----- பர்தா என்பது எங்களின் மானத்தைக் காக்கும் கேடயம் மட்டுமல்ல, பல வியாதிகளிலிருந்தும் எங்களைத் தடுக்கிறது என்கிறார். அவர் கூறும்போது:- ஜனத்தொகை நிறைந்த இடத்திற்கு நாம் செல்கிறோம் (உதாரணம்: பஸ் ஸடாப்பில்) அங்குள்ள எல்லா மக்களும் தூய்மையானவர்கள் என்று கூறமுடியாது. வியாதியஸ்தர்கள், அழுக்கேறியவர்கள் என்று பலர் நம்மீது உரசும் நிலை ஏற்படுகிறது. இந்நிலையில் அவர்கள்மீதுள்ள கிருமிகள் - அழுக்குகள் நேரடியாக நம்மைத் தாக்காமல், பர்தா பாதுகாத்து உடலுக்குச் சுகாதாரத்தைக் கொடுக்கிறது. பஸ் ஸடாப்பில் கிடக்கும் குப்பை கூலங்கள், அசுத்தங்கள் ஆகியவற்றில் உட்கார்ந்துவிட்டு பறக்கும் கொசுக்கள் - ஈக்கள் நம்மீது உட்கார்ந்து, நோயை, சுகாதாரக் கேட்டை விட்டும் தடுக்கிறது பர்தா. அந்த குடும்ப தலைவியின் யதார்த்தமான கருத்து பர்தாவின் அவசியத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது.

தஸ்லிமாக்களும், தஸ்லிமாவிற்குத் தலையாட்டும் சோஷலிஸவாதிகளும் கருதுவது போல் பர்தா பெண்ணடிமையின் சின்னமல்ல. மாறாக, அவளது ஒழுக்க நெறிக்காக ஏற்படுத்தப்பட்ட ஆதாரம் பர்தா. காம கழுகுகளின் வேட்டை தாக்குதலிலிருந்து பாதுகாப்பது பர்தா என்பதை அறிவு ஜீவிகளும் முற்போக்குவாதிகளும் உணரட்டும்.  (தொடர்வோம்)

பரங்கிப்பேட்டை. ஜி.என்

எது பெண்ணுரிமை?-2
சம உரிமை! எழும் கேள்விகள்

இனி..

சமய சார்பற்ற ஒரு நிலையை ஏற்படுத்தி பெண்களுக்கான சம உரிமைகளை வழங்கினால், இன்றுவரை வழங்கப்பட்டிருப்பதால் ஏற்படும் விளைவுகளைக் காண்போம்.

'சமஉரிமை' என்ற வார்த்தை கேட்பதற்குப் புரட்சிகரமாகவும், அறிவு ஜீவிகளுக்கு ஆனந்தமாகவும், அறியாப் பெண்களுக்கு இனிமையாகவும் இருக்கும் என்பதை எவரும் மறுக்க மாட்டார். மாதர் சங்கங்கள், பெண்ணுரிமை இயக்கங்கள் கூட சம உரிமை என்ற சல்லாபச் சொற்களுக்கு தம் மனதைப் பறிகொடுத்து ஆங்காங்கே மாநாடுகள், கருத்தரங்கங்கள், கூட்டங்கள், ஆய்வு நிகழ்ச்சிகள், உண்ணாவிரதங்கள், போராட்டங்கள் போன்றவைகளை நடத்துவதை காண்கிறோம்.

பெண்களின் வாழ்க்கை சிறப்பாக அமையவேண்டும் என்பதற்காக எந்தெந்த முயற்சிகளெல்லாம் எடுக்க வேண்டுமோ அதையெல்லாம் எடுக்கலாம். தவறில்லை. வரதட்சனைக் கொடுமைக்கு எதிராக போர்க்கொடி உயர்த்துவது, பெண்சிசு கொலையைத் தடுப்பதற்காகப் போராடுவது, கல்வி தரத்தில் முன்னேற்றம் ஏற்பட பாடுபடுவது, வேலை வாய்ப்பிற்காக முயற்சிப்பது... இப்படிப்பட்ட அத்தியாவசியமான தேவைகளுக்கு முயற்சிப்பது காலத்தில் அவசியமாகும். அதே சமயம், சம உரிமை என்ற பெயரில் பெண்களுக்குச் சீரழிவையும், நிரந்தரமான பாதிப்புகளையும் ஏற்படுத்திவிடாதீர்கள் என வேண்டுகிறோம்.

பெண்கள் கல்வி கற்பது, வேலைக்கு செல்வது, திறம்பட நிர்வகிப்பது, பேச்சாளர்களாக, எழுத்தாளர்களாக, டாக்டர்களாக, விமான பணிப்பெண்களாக, போலீஸ்களாக, உயர்மட்ட அதிகாரிகளாக, எஞ்சினியர்களாக, கவிஞர்களாக, விஞ்ஞானிகளாக, அரசியல் வல்லுணர்களாக... இப்படிப்பட்ட எந்தத் துறையில் வேண்டுமானாலும் அவள் மின்னலாம், பிரகாசிக்கலாம், ஆண்களோடு விவாதிக்கலாம், அறிவைப் பெருக்கலாம். இந்த எதற்குமே இஸ்லாத்தில் தடை இல்லை. அதேசமயம் அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் 'தான் ஒரு பெண்' என்ற நிலையை மறந்து எல்லையைத் தாண்டுவதைத்தான் இஸ்லாம் ஒப்புக்கொள்ளவில்லை. அதற்கான காரணம்... அவள் தன்னைத்தானே சீரழித்துக் கொள்ளக் கூடாது என்பதுதான்.

சோஸலிஷம் என்ற ஆண்-பெண் இரண்டரக் கலப்பு வாழ்க்கையை இஸ்லாம் விரும்பவில்லை. அதை இஸ்லாம் விரும்பாததற்குறிய காரணமும், இவர்கள் விரும்புவதற்குரிய காரணமும் இல்லாமல் இல்லை. பர்தாவால் பெண்ணுரிமை பறிக்கப்படுகிறது என்ற இவர்களது கூச்சல், பெண்ணுரிமையை காக்க வேண்டுமென்பதற்காக அல்ல, பர்தாவிற்குள் மறைந்திருக்கும் பெண்அழகை, அவளது கவர்ச்சிப் பிரதேசங்களை காணமுடியவில்லையே, தனது சிற்றின்ப நினைவுகளுக்கு தீனி போட முடியவில்லையே என்பதுதான்.

இறைவன் ஆணையும்-பெண்ணையும் மனித இனமாகவே படைத்தாலும், இருவரின் உடல்வாக்கில் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியுள்ளான். அந்த வித்தியாசம் ஆண்களின் உணர்வை சாதாரணமாக வைக்கக்கூடியவையல்ல. இயற்கையிலேயே ஆண் வலிமைமிக்கவனாக படைக்கப்படுகிறான். அந்தப் படைப்போடு சேர்த்து அவனது கடின உழைப்பு அவனது உடலை முறுக்கேற்றுகிறது. ஒரு குறிப்பிட்ட எல்லையைக் கடந்ததும், இனியும் தனது வாலிபத்திற்குத் தீனி போடாமல் இருக்க முடியாது என்று வரும்போது வடிகால்களைத் தேடி அலைகின்றான், விபச்சார விடுதிகளை நோக்கி ஓடுகின்றான். விபச்சார விடுதிகளை நாடாத ஒரு சில ஆண்களுக்கு வடிகால் தேவைப்படுகிறது. அவர்கள் என்ன செய்வார்கள்? வயிற்றுப்பசியைவிட முக்கியத்துவம் பெற்ற அந்த நேரத்தில் உடல்பசி அடங்க வேண்டும். எந்தப் பெண்ணாக இருந்தால் நமக்கென்ன, நம்முடைய தேவை பூர்த்தியாக வேண்டும் என்று அத்தகையோர் விரும்புகின்றார்கள். விளைவு. கற்பழிப்புகள், பெண்களுக்கு பாதிப்புகள்.

கற்பழிப்புகளுக்கு, பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு பலியாவதற்கு ஆண்களை மட்டும் குறைகூறி பிரயோஜனமில்லை. ஆண்களை சீண்டி, அவர்களின் உணர்வுகளைத் தூண்டக் கூடியதாக அமைந்த உடல்வாகும், அந்த உடல்வாகைத் திறம்பட ரசித்துக்கொள்.. அனுபவித்துக்கொள் என்று அழைப்பு விடும் அவர்களின் ஆடைகளுமேயாகும்.

ஆண்களின் இடைகளை வர்ணிக்காத கவிதை, அவர்களின் மார்பகங்கள்பற்றி எண்ணிப் பார்க்காத கவிதை, ஆண்களின் கன்னங்களையும் - உதடுகளையும் பற்றி மூச்சுவிடாத கவிதைகள், பெண்களின் ஒவ்வொரு அங்கத்தையும் பல்வேறு கோணங்களில் வர்ணிக்கிறதென்றால் முழு காம உணர்ச்சிகளும் அங்கே கொட்டிக்கிடப்பதை அறிவு உள்ள எவரும் மறுக்க மாட்டார்கள்.

பேரூந்துகளில், திரை அரங்குகளில், புகையிரத நிலையங்களில், விமான நிலையங்களில், இன்னும் எங்கெல்லாம் கூட்டம் கூடுகின்றதோ அங்கெல்லாம் இடிப்பு ஹீரோக்கள் மிகுதியாக மொய்த்துக்கொள்வதற்கு என்ன காரணம்! இடித்துப் பார்க்கவும், தொட்டுப் பார்க்கவும்தான். இப்படி எந்தெந்த வகையில் பெண்களுக்கு பாதிப்பை - தீராத இழிவை ஏற்படுத்த வேண்டுமோ, அத்தகைய இழிவுகளுக்கெல்லாம் தாளம் போடுவதற்காகத்தான் சோஷலிஸம் என்ற தபேலாக்களை தூக்கிக்கொண்டு ஆடுகிறார்கள்.

இதை மிகையாக எழுதவில்லை. கடந்த கால நிகழ்ச்சிகள் இதற்கு ஆதாரமாக இருக்கின்றன. 'பர்தாவை' குறைகூறுபவர்களும், கற்பழிப்பு - பெண்ணுரிமை பாதிப்புக்கு எதிராக சட்டங்கள் இயற்றியோரும் எந்த அளவுக்கு வெற்றி பெற்றார்கள்?.

ஒருபுறம் சட்டங்கள் புதிது புதிதாக பரிணாம வளர்ச்சி பெற்றாலும், பெண்களின் உடைகள் அந்த சட்டங்களுக்குச் சவால்விடுவதால், சக்கையாகப் பிழியப்பட்ட பெண்களிலிருந்து எத்தனைபேரை இந்த சட்டங்கள் காப்பாற்றியுள்ளன. சட்டங்கள் வேண்டும்.. அதாவது, பெண்களின் கற்பு சீரழிக்கபட்ட பிறகு சட்ட புத்தகங்களை திறந்து பார்ப்போர் ஒருபுறம். சட்டங்களிலுள்ள ஓட்டைகளைத் தனக்கு சாதகமாக்கிக்கொண்டு, ஆண்களுக்கு சார்பாக வாதாடி பாக்கெட்டுகளை நிரப்பும் கருப்பு அங்கிகள் மறுபுறம். விளைவு... அரை நிர்வாணத்தில் பார்க்கும் இடமெல்லாம் பெண்களின் கூட்டம். எந்தப் பெண்ணை வேண்டுமானாலும் அனுபவிக்கலாம் என்கிற ஆண்களின் ருசி மறுபுறம்.

இதுதான் சோஷலிஸ வாழ்க்கையா? பெண் உரிமைகளைப் பாதுகாக்கும் முறை இதுதானா? அறிவு ஜீவிகளே! முற்போக்குவாதிகளே(?) சிந்திக்க மாட்டீர்களா?

பர்தாவைக் காட்டிமிராண்டித்தனம் என்று வர்ணிப்போர், பர்தாவால் ஏற்படும் நன்மைகளைச் சிந்திக்கக் கூடிய அளவிற்கு அறிவு வளர்ச்சி பெறாதோர், அரைகுறை ஆடையால் ஆண்களின் உணர்வுகள் தூண்டப்பட்டு சிதைக்கப்பட்ட பெண்களின் எத்தனைபேரை உங்களின் ஜீவிதமான அறிவு காப்பாற்றி இருக்கின்றன? முற்போக்குத்தனமான சிந்தனை எத்தனை பெண்களுக்குப் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கும் அரணாக இருந்திருக்கின்றன. தகவல் உண்டா?

!பெண்ணுரிமை இயக்கங்கள்! என்றும் !மாதர் சங்கங்கள்! என்றும் பல்வேறு அமைப்புகள் இந்நாட்டில் இருக்கின்றன. நாடு சுதந்திரம் அடைவதற்காக ஏறபடுத்தப்பட்ட விடுதலை இயக்கங்களில் பெண்கள் பங்குபெற்றபோதே, பெண்ணுரிமை பற்றி சிந்தனை வந்து, பெண்ணுரிமைக்கான கழகங்கள் தோற்றுவிக்கப் பட்டன. கடந்த 50 ஆண்டுகளாக இவைகள் சாதித்தது என்ன? நாளுக்கு நாள் பாலியல் பலாத்காரம், பெண்களுக்கான வன்முறை கற்பழிப்பு தொடர்ந்தவண்ணம் உள்ளன.

இந்தியா டுடேயின் நடத்திய ஒரு அலசலை, பாதிக்கப்பட்ட பெண்களின் பட்டியலைக் கீழே தருகிறோம். பர்தாவுக்குள் அடைக்கலம் என்பது அடிமைத்தனம் என வாதிப்போர், பெண்களின் இந்த அவல நிலைக்கு ஆண்களின் வக்கிர புத்திக்கு என்ன பதில் அளிப்பார்கள்?

நேஷனல் கிரைம் ரிகார்ட் பீரோ தரும் தகவல்கள் (சதவீதங்களில்)

ஆண்டு        பாலியல்      விசாரணை          குற்றப்பத்திரிக்கை

வழக்குகள     மறுக்கப்பட்டவை  தாக்கல்                     தேங்கி கிடைப்பபை
1988        12.067       25               7,244                    3237
1989        13.010       17               7,836                    3599
1990        13.644       18               8,181                    3864
1991        14.277       13               8,430                    4368

ஒவ்;;வொரு வருடமும் பல ஆயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறார்கள். (இதற்குக் காரணம்: கவர்ச்சியைத் தூண்டக்கூடிய அவர்களின் உடைகளே முக்கிய காரணம் என்பதை நாம் கவனத்தில் தொடர்ந்து நிறுத்த வேண்டும்) பல ஆயிரக்கணக்கான பெண்கள் பாதிக்கப்;பட்ட பிறகு 'கற்பிழந்தவள்' என்று தூற்றப்பட்ட பிறகு, சமூகத்தால் கேவலமாகப் பார்க்கப்பட்ட பிறகு, ஒருசில நூறு காமுகர்களுக்கு மட்டும் தாலாட்டும் தண்டனை கொடுக்கிறது சட்டம். பெண்ணுரிமை பேணப்படுவது இப்படித்தானா? இதற்குப் பெயர்தான் சம உரிமையா?

சம உரிமை என்பது எக்காலத்திலும் நடைமுறைக்கு ஒத்துவராத கூற்று. கோபிக்காதீர்கள். இதற்கு நியாயமான பல்வேறு காரணங்கள் உள்ளன. மாதர் சங்கங்களும், மகளிர் மன்றங்களும் பெண் பாதிப்பை என்னதான் எதிர்த்துப் போராடினாலும், அந்தப் பாதிப்புகள் தொடர்ந்து நடக்கத்தான் செய்யும். ஏனெனில், உங்களிடம் போராட்டம்தான் இருக்கின்றதே தவிர, இந்த போராட்டத்திற்கான அடிப்படை காரணம் என்ன என்பது தெரியவில்லை.

ஆண் இயல்பிலேயே... வலிமைமிக்கவனாக, உடல் இச்சையின்மீது ஆவல் கொண்டவனாக படைக்கப் பட்டுள்ளான். இதை சாதாரண அறிவு படைத்தவனும் மறுக்க மாட்டான். அப்படிப் படைக்கப்பட்ட ஆண் வர்க்கத்தின் பார்வையில் பெண் எப்படி தன்னை வைத்துக்கொள்ள வேண்டுமோ (எப்படி வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை இஸ்லாம் விரிவாகக் கூறுகிறது. பின்னர் விரிவாகப் பார்ப்போம்) அப்படி வைத்துக் கொள்ளாமல் அந்த வரம்பைத் தாண்டும்போது அவள் தனக்குத்தானே அழிவுகுழி தோண்டிக் கொள்கிறாள் என்றுதான் பொருள்.

இஸ்லாம் பெண்களை பர்தா அணியச் சொல்வதன் காரணம்... அவளது உடல் அமைப்புதானே தவிர, சிந்தனை சக்திக்காகவோ மற்ற விசயங்களுக்காகவோ அல்ல. ஆண்களிலிருந்து உடல் ரீதியாக பெண்கள் பெறுத்த வேறுபாட்டில் படைக்கப்பட்டிருப்பதால் அந்த வேறுபாட்டைப் பாதுகாக்க வேண்டிய முறைப்படி பாதுகாக்கத் தவறினால் அது அவளுக்கே தீராத தீங்கை ஏற்படுத்தும் என்பதால் இஸ்லாம் பெண்களின் நலனைக் கருதி பர்தாவை அனுமதிக்கிறது.

ஆண்களை சுண்டி இழுக்கும் உடல்வாகை பெண் பெற்றிருக்கிறாள். அவளது அங்கங்களின் கன பரிமாணங்கள் வெளியில் தெரியும்போது அது ஆண்களின் ஒழுக்க வாழ்விற்கு பகிரங்க சவால் விடுகிறது. அந்த அங்கங்களைத் தொட்டுப் பார்க்கவும், ருசிக்கவும் ஆண் தவிக்கிறான். எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடிய இந்த ஆண்களால்தான், பெண்களை வியாபாரப் பொருளாக பத்திரிக்கைகளும் விளம்பரங்களும் பயன்படுத்தி காசு சம்பாதிக்கின்றன.

சிகரெட் விளம்பரம் முதல் கருத்தடை சாதனம், மஞ்சள் பத்திரிக்கை, சினிமா சுவரொட்டடிகள், துணி விளம்பரங்கள், இன்னும் என்னென்ன விளம்பரங்கள் இருக்கின்றனவோ அவை அனைத்திலும் பெண்களைப் பயன்படுத்துவதற்கு காரணம் அவளின் உடல்வாகுதான். ஆண்களின் இச்சையைத் தூண்டக்கூடிய அவளின் உடல்வாகுதான் அவளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதன் தீர்வாகத்தான் 'பர்தா' முறை அமைந்திருக்கிறது.

'சமஉரிமை' என்ற சொல்லுக்கு அடிமைப்பட்டவர்களே! உங்களிடம் ஒரு சில கேள்விகள்:----

ஆண்களோடு பெண்கள் சமம், வேறுபாடு இல்லை, வேறுபாடு வேண்டாம் என்கிறீர்கள். நீங்கள் ஆயிரம் விளக்கம் சொன்னாலும், ஆயிரம் போராட்டம் நடத்தினாலும் உடல் ரீதியில் ஆணும் பெண்ணும் வித்தியாசப்படுவதால், அந்த வித்தியாசத்தில் உங்களின் போராட்டம் எந்தப் பலனையும் ஏற்படுத்தப் போவதில்லை. விபச்சார விடுதிகள் ஆரம்பித்து, அதில் பெண்களை மட்டும் வைத்து அதை நோக்கி ஆண்கள் ஓடுவதிலிருந்து, பெண்களின் உடல் ஆண்களின் உள்ளத்தில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை சாதாரணமாக உணரலாம்.

ஆண்களும் பெண்களும் சமம் என்கிறீர்கள். சினிமா ஒரு மிகப்பெரிய மீடியா. பல லட்சக்காணக்கான மக்களை சென்றiடையக் கூடிய அந்த மீடியாவில் பெண்கள் எப்படி காண்பிக்கப்படுகிறார்கள்? ஆண்களுக்கு சமமாகவா? இல்லை. கவர்ச்சியாக வெறும் போதைப் பொருளாகக் காண்பிக்கிறார்கள். இதுதான் சம உரிமையா?

பர்தா அணிவதால் பெண்களின் உரிமை பரிபோகிறது, அதனால் ஆண்களைப் போன்று அவர்களுக்கும் சம உரிமை வேண்டும் என்ற கோஷம் மேலை நாடுகளிலும் எழுந்தது. இதை சில அறிவு ஜீவிகளும் சரிகண்டார்கள். அரசாங்கமும் அதைச் சரி என்று ஒப்புக்கொண்டது. இதன் விளைவு.. அமெரிக்கப் பெண்கள் ஒரு போராட்டத்தை நடத்தினார்கள். அதாவது, ஆண்கள் கீழாடை மட்டும் அணிந்து மேலாடை இல்லாமல் தெருக்களில் செல்வது போல், நாங்களும் மேலாடையின்றி தெருக்களில் செல்வோம் என்று கோஷம் எழுப்பினார்கள்.

இன்று இந்தியாவிலும், 'ஆண்-பெண்ணுக்குள் பேதம் காட்டக்கூடாது, அவர்களுக்கு சம உரிமை வேண்டும், வித்தியாசப்படக் கூடாது' என்று வாதிப்பவர்களே.... அமெரிக்கப் பெண்களின் போராட்டம் போன்று ஒரு போராட்டத்தில் நம் பெண்கள் இறங்கினால் அதை அனுமதிப்பீர்களா? சம உரிமை, சம உரிமை என வாய் கிழியக் கத்துவோர், பேனாக்களின் முனை மழுங்க எழுதுவோர் இதை அனுமதித்துத்தான் ஆக வேண்டும்.

வயல்வெளியில் வேலை செய்யும் பெண்கள், கட்டிட வேலை செய்யும் பெண்கள், கூலி வேலை செய்யும் பெண்கள் அரை நிஜாரோடு, அதாவது... ஆண்கள் எப்படிக் கோவணத்துடன் அல்லது ஒரு அரைக்கால் டிரவுசருடன்; கீழாடையை போதுமானதாக்கிக் கொண்டு வேலை செய்கிறார்களோ, அதே போன்றுதான் பெண்களும் கீழாடையோடு மட்டும்தான் வேலை செய்ய வேண்டும் என்று பிரசாரத்தை வலுப்படுத்த வேண்டும். அப்பொழுதான் நீங்கள் எந்த சம உரிமையை எதிர்பார்க்கிறீர்களோ அந்த சம உரிமைக்கு ஒரு அர்த்தம் இருக்கிறது. அறிவு ஜீவிகளே! மாதர் சங்கங்களே... மதச்சார்பற்ற சோஷலிஸ வாழ்க்கையை விரும்பும் முற்போக்குவாதிகளே... உங்களில் எத்துனைபேர் இந்தப் பிரச்சாரத்திற்குத் தயார்? முன் வருவீர்களா? இதற்கு நீங்கள் தயாரில்லை என்றால் நீங்களே வகுத்துக் கொண்ட சம உரிமை என்ற சித்தாந்தத்தின் மீது உங்களுக்கே நம்பிக்கை இல்லை என்பதுதான் பொருள். எதைச் செய்யப் போகிறீர்கள்? கடைசியாக தஸ்லிமாவிற்காக தாளம் தட்ட வந்தவர்களுக்கு நாம் கூறுகிறோம்..

பெண்ணுரிமை வேண்டும்-அவசியம் வேண்டும்-ஆணித்தரமாக வேண்டும். அதை இஸ்லாம் கொஞ்சமும் குறைவில்லாமல் கொடுத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அந்த உரிமைகளை ஆண்களின் உரிமைகளோடு ஒப்புநோக்கி குறை காணாதீர்கள். ஆண்களுக்கும் - பெண்களுக்கும் உள்ள வித்தியாசத்தை உணருங்கள். உடலிலும், உணர்விலும் அவர்களுக்குள் உள்ள வேறுபாட்டை ஆராயுங்கள். அந்த வேறுபாடுகளை ஒன்றிணைத்தால் ஏற்படும் பின்விளைவுகளை அலசிப் பாருங்கள்.

பெண்ணைப் பெண்ணாக மதித்து, அவளுக்கென்று இஸ்லாம் கொடுத்துள்ள உரிமைகளில் உங்களுக்கு தவறுகள் தென்பட்டால் அதை பகிரங்கமாக விமர்சியுங்கள். உங்கள் விமர்சனங்களுக்கு விளக்கமளிக்கவும், விபரம் தெரிவிக்கவும் நாம் காத்திருக்கின்றோம்.  (தொடர்வோம்)

பரங்கிப்பேட்டை. ஜி.என்

எது பெண்ணுரிமை?01
தமிழ் இலக்கியத்தில் பெண் பற்றிய பார்வை.

ஒவ்வொரு கால கட்டத்திலும் வெவ்வேறான புரட்சி வெடித்துக் கொண்டிருப்பதை உலகம் கண்டு கொண்டு இருக்கின்றது. அத்தகைய புரட்சிகள் சில நேரங்களில் உலக வளர்ச்சிக்கும், பல நேரங்களில் மனித அழிவிற்கும் வித்திட்டிருக்கின்றன. ஒரு சில புரட்சிகள் ஒன்றுமில்லாமல் போவதும் உண்டு.

மனித மனநிலைகளும், வேறுபட்ட கோணங்களும், புரட்சி என்ற சொல்லுக்கு பல்வேறு அர்த்தம் கொடுத்து விட்டதால் புரட்சி ஒரு வரையறையை மீறி தன் பயணத்தைத் தொடர்கின்றது.

ஆக்கங்கள் மட்டுமே, மனித வளர்ச்சியின் மகத்துவம் மட்டுமே புரட்சியின் குறிக்கோளாக இருந்த காலங்கள் கடந்துபோய், இன்று புரட்சி என்றாலே வசை மொழிதலும், தாக்குதலும், தரக்குறைவாக விமர்சித்தலும், மற்றவர்களைப் புண்படுத்தும்படி பேசுதலும், எழுதுதலும் என்ற நிலை வந்து விட்டது.

புரட்சிக்கு புது இலக்கணம் வகுக்கப் புறப்பட்டவர்களும், அதில் சிக்கிக் கொண்டவர்களும் இன்றைய மனித எய்ட்ஸ்கள். இந்த நோய் பிடித்தவர்கள் தனது கிருமிகளைப் பேனா முனைகளாலும், பேச்சுக்களாலும் பரப்பி வருவதால் ஆங்காங்கே இந்த நோய்க்கிருமிகளை புரட்சி என்ற பொய்ப்புலம்பலாக எடுத்துக் கொண்டு தம் வாழ்க்கையை அழித்துக் கொண்டவர்களும், அழித்துக் கொண்டிருப்பவர்களும் அனேகம்.

இந்தப் பட்டியலில் சில காலங்களுக்கு முன் சல்மான் ருஷ்டி இடம் பிடித்தார். அவரது ரசிகராக அருண்ஷோரி சிக்கினார். இப்போது இந்த தஸ்லீமா நஸ்ரின்.

எழுத்து சுதந்திரமும், விமர்சனங்களும் அறிவாளிகளின் ஆயுதங்கள் என்பதை எவரும் மறுக்க மாட்டார். அதே சமயம் அந்த ஆயுதங்கள் எழுதுபவரின் குரல் வளையையே குறி வைக்கிறது என்றால் அதற்குப் பெயர் சுதந்திரமும் அல்ல புரட்சியுமல்ல.

ஒவ்வொரு பிரச்சனையையும் ஏன்? எதற்கு? என்ற வினாக்களோடு அணுகி விடை காண வேண்டும். மாறாக கனத்த திரைகளுக்குள் தலைகளைக் கவிழ்த்துக் கொண்டு வெளிச்சம் பற்றி விமர்சிப்பது வேதனைகளும், வேடிக்கைகளுமாகும். இந்த சிற்றறிவு கூடத்தில் சிக்கிக் கொண்ட தஸ்லிமாவுக்காக அனுதாபப் படுகிறோம்.

எங்களை பொறுத்தவரை தஸ்லிமா ஒன்றுமறியாத சிறு குழந்தை என்றாலும், அந்த குழந்தையின் குமட்டல்களுக்கும், அலறல்களுக்கும் ஆராதனை செய்து தனது அரிப்பைத் தீர்த்துக்கொள்பவர்களின் நிஜ முகங்களை அப்பலப்படுத்த வேண்டியுள்ளது.

இஸ்லாம் தன்னை நோக்கி வரும் விமர்சனங்களை வரவேற்க தலை நிமிர்ந்து என்றென்றும் நிற்கிறது. காயப்படுத்த வந்தவர்கள்தான் காயப்பட்டு போனார்களே தவிர இஸ்லாம் காயப்படவில்லை.

இஸ்லாம் எடுத்தோதும் சில பிரச்சனைகளை அறிவுப் பூர்வமாகச் சிந்திக்க மறுக்கும் ஏடுகள் பல உண்டு.  தினமலர், இந்திய டுடே, நக்கீரன் உட்பட மேல்மட்ட பத்திரிக்கைக் கூட்டம் இதில் அடங்கும். அவ்வப்போது இஸ்லாத்தைத் தீண்டுவதும், அதன் சட்டதிட்டங்களைக் குறை கூறுவதும் இவர்களின் பொழுது போக்காகும். இப்போது ஒரு தஸ்லீமாவின் வெளிப்பாடு அவர்களுக்குள் கும்மாளத்தை ஏற்படுத்தியுள்ளது.

தஸ்லிமாவிற்கும், இஸ்லாத்திற்கும் இடையில் எத்தைகைய உறவு இருக்கின்றது, தஸ்லிமாவின் குற்றச்சாட்டுகளுக்கு இஸ்லாமிய சட்ட கருவூலகங்களின் பதில் என்ன? என்பதைப் பார்க்காமல், பார்க்கத் தெரியாவிட்டால், கேட்டு கூட தெரிந்து கொள்ளாமல் இஸ்லாத்தை இந்த பத்திரிக்கைகள் விமர்சிக்கின்றதென்றால், அவர்களின் நோக்கம் தஸ்லிமாவிற்கு உதவ வேண்டும் என்பதோ, தவறுகளைக் களைய வேண்டும் என்பதோ அல்ல. மாறாக இஸ்லாத்தைக் கேவலப்படுத்தி, முஸ்லிம்களைப் புண்படுத்த வேண்டும் என்பதேயாகும். இது மிகையல்ல. இதுதான் உண்மை.

9-7 நக்கீரன் இதழ் இதற்கான போதிய சான்றாகும். தஸ்லிமா நஸ்ரின் : பயங்கரவாதிகள் விதித்த மரண தண்டனை ! என்று அட்டைப்படத்தில் கொட்டை எழுத்துக்களில் போட்டு, அந்த மரண தண்டனை நியாயமானதா? என்று ஒரு அலசல் நடத்தி இருக்கிறது நக்கீரன் ஏடு.

தஸ்லிமா என்ற பெண்ணின் உரிமை பறிக்கப்பட்டால் அதற்காக மத பாகுபாடின்றி நக்கீரன் போன்ற இதழ்கள் குரல் கொடுத்தால், கண்டனங்கள் தெரிவித்தால் அந்த இதழ்களோடு நாமும் கைகோர்த்து நிற்போம். அந்த வகையில் நக்கீரனின் விமர்சனத்தை நாம் வரவேற்கிறோம். அதே சமயம் அந்த ஏட்டில் இடம்பெற்றுள்ள அலசல், சத்திய இஸ்லாத்தின் மீது அவதூறு கூறி, இஸ்லாம் ஆண் ஆதிக்கத்திற்கு துணை போகிறது, பெண்களை அடிமைப்படுத்துகிறது என்றெல்லாம் வசை பொழிந்துள்ளதால் அது சம்மந்தமாக, நக்கீரன் போன்ற குறைபார்வையுடைய விமர்சன ஏடுகளின் புத்தியில் உறைப்பதுபோல், இஸ்லாத்தின் எதார்த்த நிலைகளைக் கூறுவது நம்மீது அவசியமாகின்றது.

இஸ்லாத்தில் ஆணாதிக்கம் வெறும் குற்றச்சாட்டே..!

தஸ்லிமாவின் கடந்த கால வாழ்க்கையை நக்கீரன் அலசும்போது 'ஆணாதிக்கத்திற்கு இஸ்லாம் தந்துள்ள சலுகையில் மூன்று முறை விவாகரத்து செய்யப்பட்டவர், அந்த கோபம் ஆணதிகாரத்து மீது வீறு கொண்டு கிளம்பிது. பெண் உரிமை, பெண் முன்னேற்றம் ஆகியவற்றிற்கு ஆதரவாகவும், சாடிஸ்களுக்கு எதிராகவும் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்தது! என்று தனது குற்றச்சாட்டை நக்கீரன் நம் முன்னே வைக்கிறது.

இதில் பிரதானமாக மூன்று குற்றச்சாட்டுகள் இஸ்லாத்தின் மீது வீசப்பட்டுள்ளதால், அந்த குற்றச் சாட்டுகள் எந்த அளவிற்கு இஸ்லாமிய அடிப்படை வாதத்திற்கு மாற்றமானவை என்பதை விரிவாக உணர்த்துவது அவசியமாகும்.

குற்றச்சாட்டுகள்:

1. ஆணாதிக்கம்
2. பெண் உரிமையைப் பறித்தல்
3. பெண் முன்னேற்றத்திற்குத் தடையாக இருத்தல்

இஸ்லாம் ஆணாதிக்கத்தை விரும்புகிறதா..?

ஆதிக்கம் என்ற சொல், மற்றவர்களை அடிமைப்படுத்துவது குறித்து பயன்படுத்தப்படுவதாகும். இந்த சொல் முஸ்லிம் ஆண்களோடு சம்மந்தப்படுத்தப்பட்டதிலிருந்து, முஸ்லிம் ஆண்கள், பெண்களை அடிமைப் படுத்துகிறார்கள் அதை இஸ்லாம் விரும்புகிறது என்ற தோற்றம் இவர்களின் குற்றச்சாட்டுகளில் காணப்படுகிறது.

இஸ்லாம் ஆண்களையும் பெண்களையும் எந்த அளவுகோல் கொண்டு பார்க்கின்றன, எந்த விஷயங்களில் ஆண் பெண்ணுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்தி, எந்தெந்த விஷயங்களில் வேற்றுமை கற்பிக்கின்றது அது எந்த வகையிலெல்லாம் நியாயம் என்பதைப் பார்ப்பதற்கு முன், இஸ்லாம் அல்லாத மற்ற சமயங்கள் பெண்களை எந்த கோணத்தில் பார்க்கின்றன. மதமில்லாத சட்ட திட்டங்கள் பெண்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பதையெல்லாம் எடுத்துக் காட்டுவோம்.

பெண்ணுரிமைக்காக வக்காலத்து வாங்குவதாக கூறுவோறும், அவர்கள் சார்ந்து நிற்கும் சமயங்களும் உண்மையிலேயே பெண்களை காலா காலமாக பாதாள படுகுழியில் தள்ளியே வைத்துள்ளன.

இஸ்லாம் தமது சமய நெறியை இறுதி கட்டமாக வெளிப்படுத்துவதற்கு முன் ஒவ்வொரு சமயத்திலும் முனிவர்கள் இருந்தார்கள். ஞானிகள் இருந்தார்கள். அவர்கள் தம், தம் சமய கோட்பாட்டிற்காக வேத ஏடுகளைத் தொகுத்தார்கள். அப்படிப்பட்ட தொகுப்பு ஒவ்வொன்றிலும் பெண்மை கேவலப் படுத்தப்பட்டு அவளது மெண்மை பறிக்கப்பட்டு, உரிமைகளும், முன்னேற்றங்களும் பாழ்படுத்தப்பட்டு, அவளை மனித இனமாகவே மதிக்காத நிலை நீடித்தது. இன்றும் நிடிக்கின்றது.

வேதகாலம், வேதகாலத்திற்கு முந்திய காலம், அதை அடுத்து வந்த காலங்கள், பழைய தமிழ் இலக்கியங்கள் அதன் பழமொழிகள், பழங்கதைகள், தொல்காப்பியம், அதை அடுத்து வந்த சங்ககால இலக்கியங்கள், திருக்குறள் காலம், அறநூல்கள் என்று பெயர் பெற்றவை. சிலப்பதிகாரம், மணிமேகலை, ராமாயணம், மனுதர்மம் இப்படி எல்லா வகை சமய மற்றும் இலக்கிய நூல்களிலும் பெண்மை வதைக்கப் பட்டு, வெறும் போதைப் பொருளாக ஆக்கப்பட்டு, உரிமைகள் மறுக்கப்பட்டு, பறிக்கப்பட்டு சிதைத்து சின்னாபின்னப் படுத்தப்பட்டிருப்பதை காணலாம்.

மேலதிகமாக விளக்கம் கூற தேவையில்லாத அளவிற்கு சமய சந்தைகளின் இலக்கிய கடைவிரிப்புகள் இலவசமாக பெண்களை இம்சித்துள்ளன.

இந்நாட்டு சமய இலக்கியங்கள் அனைத்துமே பெண்களின் கண்ணீர் காவியங்கள். கணவன் என்னதான் கொடுமை செய்தாலும் அதை பொறுமையுடன் சகிப்பதுதான் இறைபக்திக்கு நெருக்கம் என்று போதித்துள்ளன.

பஞ்சபாண்டவர்கள் தம் தாயின் உபதேசத்தை தவறாக புரிந்து, அதாவது... கொண்டுவந்த பிச்சையை ஐவரும் பகிர்ந்து கொள்ளுங்கள் என்பதை, உங்களோடு இருக்கும் பெண்ணை ஐவரும் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று பொருள் எடுத்து, ஒரு பெண்ணை ஐவர் மணந்து அவளுக்கு !பத்தினி! பட்டமளித்த விளக்கங்கள் அனேகம்.

ஓநாய்களின் அன்பு எப்படி உண்மையில்லாததோ அதே போன்று பெண்களின் அன்பும் உண்மையில்லாதது. உலகத்து மாந்தர் பெண்களை பெண்களை நம்ப வேண்டாம். (தேவி பாகவதம்)

ஆற்றையும் காற்றையும் நம்பலாம். கோபமத யானையை நம்பலாம். சேலை கட்டிய மாதரை நம்பினால் தெருவில் நின்று திண்டாடுவீரே........ (இந்து சமய சான்றோர்)

தொல்காப்பியம் காலத்தில் ஒருவன் எத்துனை பெண்களுடன் வேண்டுமானாலும் உறவு வைத்துக் கொள்ளலாம் என்று பெண்களைப் போகப் பொருளாக வருணிக்கின்றது. தொல்காப்பியத்தின் கற்பு இயல் பிரிவில் (பக்கம் 46) பரத்தையர் பிரிவினை என்று பெண்கள் ஆண்களின் வடிகால்களாகப் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்.

காதற்பரத்தை, கற்பரத்தை, சேரிபரத்தை, காமகிழத்தி என்று பிரித்து ஆண்கள் எந்தப் பெண்ணுடன் வேண்டுமானாலும் செல்வதை அனுமதிக்கிறது.

சங்க காலத்திலும் இதே நிலைதான் பெண்கள் தங்கள் வாழ்வின் அடிப்படை தேவையான துணை ஆடவனை தானே தேர்ந்தெடுக்கும் உரிமையை இழந்து நின்றார்கள். அரசகுல பெண்களுக்கும் இதே நிலைதான் என்று புறநானூறு கூறுகிறது.

மனைவிழைவார் மாண்பயன் எய்தார் (901)
மனையாளை அஞ்சும் மறுமையலாளன் (904)
அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ணேவில் செய்வார் கண் இல் (909)

கணவன் எந்த ஒரு தவறைச் செய்தாலும் பொறுமையுடன் சகிக்க வேண்டும். அவனுக்கு எதிராக சிந்திக்கவோ, செயல்படவோ கூடாது என்கிறது நறுந்தொகை. ! பெண்டிற்கழகு எதிர் பேசாதிருத்தல்!

சிலப்பதிகாரம்

(திருமணத்தை ஒரு வாழ்க்கை ஒப்பந்தம் என்றும், கணவன் மணைவியின் வாழ்க்கை இனிமையாக வாழலாம் இல்லையெனில் பிரிந்துவிடலாம் என்று இஸ்லாம் சொல்கிறது. ஒப்பந்தத்திற்குரிய தகுதியே இதுதான். பின்னர் நாம் இதை விளக்குவோம்)

பெண் என்பவள் கணவனுக்காகவே வாழ வேண்டும், தன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அவனது நடவடிக்கைகளை, ஒழுங்கீனங்களை எதிர்த்து அறிவுரை கூட கூறக்கூடாது. தாங்கிக் கொண்டு வாழவேண்டும் என்பதையே போதிக்கின்றது.

பெண்டிரும் உண்டுகொல் பெண்டிரும் உண்டுகொல்
கொண்ட தொழுநன் உருகுறை தாங்குறுவும்
பெண்டிரும் உண்டுகொல். (ஊர் சூழ்வரி - 51)

அதே சிலப்பதிகார காலத்தில் தாயே தன் மகளை விலைபேசி ஆடவரோடு சேர்த்துவிடும் சண்டாளத் தனமும் நடந்துதான் உள்ளன. ! மாலை வாங்குனர் சாலும் நம் கொடிக்கு ! என்கிறது மாதவி தாயின் குரல்.

சங்க கால இலக்கியங்களில் பெண்கள் இழிவுபடுத்தப்படாததற்கான காரணமே அதற்கு முந்தைய வேத காலங்கள்தான்.

வேதங்களைப் பலவாறாகப் பிரித்து அதில் மனிதன் வர்ணாசிரமத்திலும், பிறப்பிலும் ஏற்றத் தாழ்வுகளை கற்;பித்து, சட்டங்கள் வகுத்து, அந்த வேதக் கட்டளைகளை கண்மூடி ஏற்று இன்றுவரை பெண்களை கொடுமைப் படுத்தும் நிலையையும் பார்க்கிறோம்.

சூத்திர இனத்துப் பெண்கள் உயர்ந்த குலத்தவர்களை மணம் செய்து கொள்வது பாவம் என்கிறார் கொளதமர். பெண்கள் சமய சடங்குகளில் கலந்து கொள்ளக் கூடாது என்கிறது மனு தர்மம்.

கணவனுக்கு வழிபட்டுநடக்காத பெண்களை, நெறி தவறும் பெண்களை வைக்கோற்கட்டில் வைத்து உயிரோடு கொளுத்த வேண்டும். (போதா நயர் தரும சூத்திரம்)

பிரமத்தின் வாயிலிருந்து பிறந்தவன் பிராமணன்;., தோளிலிருந்து பிரந்தவன் சத்திரியன்., தொடைகளிலிருந்து பிறந்தவன் வைசியன்., பாதங்களிலிருந்து தோன்றியவன் சூத்திரன்.  (ரிக் வேதம்)

இந்த வேத அடிப்படையில் தொகுக்கப்பட்ட சட்டங்கள் மிகக் கொடுமையானவை.

இன்றைக்கும் தமிழ் அறிஞர்களால் சிறப்பாகப் பேசப்படும் சங்க காலத்தில் பெண்கள் கொத்தடிமைகள் போல் பாவிக்கப்பட்டுள்ளார்கள். சொத்துரிமை, கல்வி, மறுமணம் எல்லாம் மறுக்கப்பட்டன.

கணவனை இழந்தவளை கைம்பெண், ஆளில்லா பெண்டிர், கழிகல மகளிர் என்றெல்லாம் தூற்றப்பட்டது. கணவனை இழந்த பெண் அவனுக்கு பிறகு வாழ்வது புனிதமல்ல, அவனோடு உடன்கட்டை ஏற வேண்டும் என்றெல்லாம் சங்க கால ஏடுகள் சக்கை போடு போடுகின்றன.

உடன்கட்டை ஏற மறுக்கும் பெண்கள் தம் உணர்ச்சிகளை சாகடிப்பதற்காக கடுமையான விரதத்தை மேற்கொள்ள வேண்டும. அவளது அழகு சிதைக்கப்பட வேண்டும், அவர்களின் கூந்தல் வெட்டப்பட வேண்டும், வளையல்கள் நொறுக்கப்பட வேண்டும் என்றெல்லாம் சட்டம் இயற்றினர்.

மண்ணூறு மழித்தலைத் தெண்ணீர் வார
கழிகல மகளிர் போல
கூந்தல் கொய்து குறுந்தொடி நீக்கி
அல்லியுணவின் மனைவியொடு (புற - 4:250)

கணவனை இழந்தவளின் (அவள் எவ்வளவுதான் இள வயதுடையவளானாலும் சரி) முடிகளைக் களைந்தெறிந்து, முகம் கை கால்களில் ஆபரணங்கள் அணிய விடாமல் தடுத்து, சுவைமிக்க உணவுளை அவர்களின் கண்களில் கூட காட்டாமல், அரிசி கீரையே அவர்களின் உணவு. கணவனை இழந்ததற்காக தரையில் படுத்து, கண்ணீராலேயே தரையை மொழுக வேண்டும். (ஐந்குறு நூறு)

அண்டை நாடுகள் மீது படையெடுத்து பிடிபட்ட பெண்களின் சடைகளை அறுத்து திரித்து கயிராக்கி பெண்களை உழவு மாடுகளாக பூட்டி சித்திரவதை செய்யப்பட்டதையும் இலக்கியங்கள் கூறுகின்றன. (பதிற்று பத்து)

ஆண்கள் நடத்தும் காமலீலைகளை, விபச்சார வெறித்தனங்களைப்பற்றி வாய் திறக்காமல் பெண்களுக்கு மட்டும் கற்பு நெறி போதிக்கிறது தொல்காப்பியம். (களவியல்)

திருவள்ளுவரின் குறள்களிலும் பெண்ணடிமை கருத்துக்கள் அனேகம். பெண்களுக்கான கற்புநெறியைப் பற்றி பல இடங்களில் கூறுகிறாரே தவிர, ஆண்களுக்கு அறிவுரை அதிகம் இல்லை. இருக்கும் இடத்திலும் ! பிறன் மனை நோக்காத பேராண்மை ! என்கிறார். ஆண்கள் பிறரின் மனைவி மீது மோகம் கொள்ளாமை பேராண்மை என்கிறாரே தவிர, பிற பெண்கள் மீது மோகம் கொள்ளாதே என்று கூறவில்லை.

கணவனுக்குக் கீழ்படிய வேண்டும் மணைவி, மணைவியின் ஆலோசனைப்படி நடப்பவன் மறுமையில் வெற்றிபெற மாட்டான், கணவனின் சொற்களுக்குக் கட்டுப்படுவதே மணைவியின் கடமை. மாறாக ஆடவன் பெண்களின் ஏவலுக்கு அடிபணிதல் கூடாது.

பிராமணர்கள் சூத்திர பெண்களை கண்களால் காண்பதே பாவம். சூத்திரப் பெண்ணொருத்தி பிராமணனைப் பார்த்துவிட்டால் பிராமணன் தீட்டு அடைந்து விடுகிறான். அன்றைய தினம் அவன் மறை ஓதக்கூடாது. (தரும சூத்திரம்)

பெண்கள் தனி வாழ்க்கை வாழக் கூடாது. அவள் குழந்தை பருவத்தில் தந்தையை, இளமைப் பருவத்தில் கணவனை, முதுமையில் ஆண்மக்களைச் சார்ந்தே வாழ வேண்டும் என்பது மனுவின் கோட்பாடு. (மனுதர்மம்)

ஒவ்வொரு காலகட்டத்திலும் குறிவைத்து பெண்களுக்காக இழைக்கப்பட்டுவரும் கொடுமைகளை பல பாகங்கள் அளவிற்கு எழுதலாம். தாசி, வேசி, தேவடியாள் போன்ற சொற்கள் எப்படி வந்தன? அதன் பின்னனி என்ன? வேதங்களும், அன்றைய முனிவர்கள் பெரிய மனிதர்கள் இதையெல்லாம் எப்படி ஏற்றிப் போற்றினார்கள். உடன் கட்டை கொடுமைகள், உண்ணா நோன்பு கொடுமைகள், சொத்துரிமை பரிப்பு கொடுமைகள் என்று ஒரு மிகப் பெரிய பட்டியலையே நம்மால் கொடுக்க முடியும். அதன்பிறகு இஸ்லாமிய அடிப்படை வாதம் பழைமையானது, முறையற்றது என்றெல்லாம் புலம்பித் தெரியும் மதவாதிகள் தங்கள் தலைகளில் முக்காடு போட்டுக்கொள்ள வேண்டியதுதான். தஸ்லிமா பிரச்சனையில் நிறைய விளக்கம் கொடுக்க வேண்டியுள்ளதால் இதோடு இதை முடிக்கிறோம். இன்ஷா அல்லாஹ்: இதைத் தொடர்ந்து வெளிவர இருக்கும் பெண்கள் பற்றிய தொடரில் எல்லா சமய பெண்களின் நிலையும் விரிவாக அலசப்படும்.

ஜி.என் (பரங்கிப்பேட்டை)

எது பெண்ணுரிமை?
பெண்கள் மீதான நேர் - எதிர்மறையானப் பார்வைகள்

(முக்கியக் குறிப்பு : சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன் வங்க தேசத்தைத் தாய்நாடாகக் கொண்ட தஸ்லிமா நஸ்ரின் என்ற ஒரு பெண் எழுத்தாளர் - லஜ்ஜா - என்று ஒரு நூலை வங்க மொழியில் எழுதினார். முஸ்லிம் பெண்களின் அவல நிலையை சொல்லப் போவதாக துவங்கி இஸ்லாத்தில் பெண்களுக்குரிய சட்டக் கோட்பாடுகளை விமர்சித்து எழுதியதோடு குர்ஆன் மாற்றப்பட வேண்டும் என்றும் தனது கருத்தை வெளியிட்டார். (தான் அவ்வாறு சொல்லவே இல்லை என்று பின்னர் மறுத்தார்) அவர் பற்றிய சர்ச்சை கிளம்பியவுடன் சில இஸ்லாமிய அமைப்புகள் அந்தப் பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று குரல் எழுப்பியது. இதற்காகவே காத்துக் கிடந்த இஸ்லாமிய விரோத சக்திகள் தஸ்லிமாவிற்கு ஆதரவு என்ற பெயரில் களம் இறங்கி இஸ்லாத்தை விமர்சித்துத் தள்ளியது. தமிழகத்தின் பல பத்திரிக்கைகளும் இதில் அடக்கம். தமிழகப் பத்திரிக்கைகளுக்கு பதில் கொடுத்து இஸ்லாத்தின் உண்மை நிலையை விளக்குவதற்காக இலவசப் பிரதியாக இந்நூல் தொகுக்கப் பட்டு தமிழகம் முழவதும் அனுப்பி வைக்கப்பட்டது.

இதைப் படித்து விட்டு 'போலிஸ் செய்தி, புதியப் பார்வை, புதிய கலாச்சாரம்' ஆகிய இதழ்கள் மறுப்புக் கட்டுரை வெளியிட்டன. புதியப் பார்வையில் கருத்துக்கள் பற்றிய விமர்சனம் இல்லாமல் இஸ்லாமிய அறிஞர்கள் பற்றிய கருத்தோட்டங்கள் வெளிவந்தன. போலிஸ் செய்தியில் மஸாலா கலந்த சினிமாத்தனமான விமர்சனம் வந்தது. புதில் கொடுக்க ஏற்ற விதத்தில் அவையில்லை. புதிய கலாச்சாரத்தின் விரிவான விமர்சனத்திற்கு பதில் கொடுக்க வேண்டி இருந்தாலும் அதற்குறிய சூழ்நிலையை இறைவன் அன்று ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. இன்று ஒரு உலகளாவிய வலைமனை வாய்ப்பை இறைவன் ஏற்படுத்திக் கொடுத்துள்ளதால் இந்த புத்தகத்தின் மீதான விமர்சனங்களுக்கு பதிலளிக்கலாம் என்று நாடியுள்ளோம். அதன் முதல் படியாக நாம் எழுதிய புத்தகத்தை உங்கள் பார்வைக்கு வைக்கிறோம். மிக நிதானமாகவும், ஆழமாகவும் இதைப்படியுங்கள். இதன் பின்னர் புதிய கலாச்சாரத்தின் விமர்சனம் முழுவதும் வெளியிடப்பட்டு அதன் பின்னர் அதற்குரிய விளக்கத் தொடர் வரும் இன்ஷா அல்லாஹ் ஜீ, என்)

என்னுரை:

கடந்த 1415 வருடங்களாக இஸ்லாம் தமது செழிமையான வாழ்க்கைத் திட்டத்தை மனித இனம் முழுமைக்கும் சொல்லி வந்து கொண்டிருக்கின்றன. பரந்த தன்மையுள்ள, அறிவுப்பூர்வமான வாதங்கள் அதில் அடங்கியுள்ளன. ஒரு சில பிரச்சனைகளில் அதன் அணுகு முறை ஒரு சிலருக்குப் புரியாததால், அவர்களுக்குப் புரிய வைக்கப்படாததால் அவ்வப்போது இஸ்லாத்தை அதன் தனித்தன்மையான வாதங்களைக் குறை கூறி வருவது அவர்களின் வழக்கம். இது ஒரு புறம்..

இன்னொருபுறம்.. செழிப்பான இஸ்லாத்தை குறை கூறி, தவறாக விமர்சித்தால் பேரும் புகழும் எடுக்கலாம், பத்திரிக்கை எழுதினால் பணம் சம்பாதிக்கலாம் என்ற நப்பாசையால் பத்திரிக்கையில் எழுதி, எழுதியவர்களே அசிங்கப்பட்டு போவது மறுபுறம்.

இரண்டாம் முறைதான் மக்கள் மத்தியில் சாதக, பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். அப்படிப்பட்ட ஒரு பிரட்சனைதான் தஸ்லிமா நஸ்ரினுடையது. தஸ்லிமா ஏற்கனவே அடிக்கடி மனநிலை மாறக் கூடியவர் என்று அவரே கூறியுள்ளார். செக்ஸ் வாழ்க்கையில் பல விதத்தில் பலருடன் இன்பம் அனுபவிப்பதை விரும்பியும், பிறரையும் அதற்காகவே தூண்டியவரும்தான் இந்த தஸ்லிமா.

'ஆண்களைப் பலாத்காரப் படுத்துங்கள்' என்று ஒரு பெண் தன்னைப் போன்ற பெண்களிடம் கூறுகிறார் என்றால் அதற்கு மேல் அவர் நிலையைப் புரிய வைக்க வேண்டிய தேவையே இல்லை. செக்ஸ் புலவராக அல்லது மஞ்சள் பத்திரிக்கையாளராக தஸ்லிமா தன்னை பகிரங்கப்படுத்தி இருந்தால், இந்த அளவு சர்ச்சை இல்லாமல் இன்னும் உயர்மட்ட வாழ்விற்குச் சென்றிருப்பார்.

ஆனால் அவரின் துரதிருஷ்டம் இஸ்லாத்தை இடித்துரைத்து விட்டார். விளைவு குறி தவறூத இஸ்லாமிய பேனாக்களின் தாக்குதலில் தஸ்லிமா திணறி போய்விட்டார் என்பது உண்மைதான். அதை அவரே கூறியுள்ளார். அவரைப் பற்றிய விமர்சனம் அல்ல இந்த கட்டுரை. அது நமக்குத் தேவையுமல்ல. அதே சமயம் தஸ்லிமாவிற்கு மரண தண்டனை கொடுப்பதை நாம் ஏற்கவில்லை. இஸ்லாமிய அடிப்படையையும் ஏற்கவில்லை. கருத்து சுதந்திரத்தைப் பறித்து, குரல்வளையை நெறிக்கும் பங்களாதேஷ் ஜமாத்தே இஸ்லாமியின் கட்டளையை குர்ஆன், ஹதீஸ் ஏற்கவில்லை. யார் யாருக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகின்றதோ அதில் தஸ்லிமா போன்ற கோழி குஞ்சுகள் அடங்கமாட்டார்கள்.

தஸ்லிமாக்களின் குற்ற வீச்சுக்களுக்கெல்லாம் அறிவிப்பூர்வமான விளக்கம் கொடுப்பதுதான் அறிஞர்களின் அழகு. மரண தண்டனை அத்துமீறல் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

தஸ்லிமாவிற்கு தாளம் போட்டு களத்தில் இறங்கி இஸ்லாத்தை விமர்சிக்கும் எல்லாப் பத்திரிக்கைகளுக்கும் இந்த இதழில் பதில் உண்டு.

பழங்கால கதைகள், இலக்கியங்களில் பெண்கள் எவ்வாறலெ;லாம் இழிவுப் படுத்தப்பட்டார்கள் என்பது இதில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

சமயங்களைச் சாராதவர்கள், 'சோஷலிஸமாக ஆணும், பெண்ணும் வாழ சம உரிமை வேண்டும்' என்று வாதிக்கும் வாதத்தில் பெண்களுக்கு எவ்வளவு பெரிய அழிவு ஏற்படுகிறது, இன்னும் காத்திருக்கிறது என்பது ஆணித்தரமாக உணர்த்தப்பட்டுள்ளது.

இஸ்லாம் பெண்களுக்கு உரிமை கொடுக்கவில்லை! அடிமைப் படுத்துகிறது என்ற வாதங்களில் உள்ள ஓட்டைகள் அறியாமைகள் கிழித்தெறியப்பட்டுள்ளது.

பர்தாவின்(புர்கா) நன்மை, அதனால் ஏற்படும் சிறப்புகள் அறிவுப்பூர்வமாக எழுதப்பட்டுள்ளன.

ஆண்கள் கையில் தலாக் கொடுக்கப்பட்டுள்ளதால் பெண் உரிமை பறி போகிறதா? என்பதையும், தலாக் உரிமை கொடுக்கப்படாவிட்டால் பெண்களுக்கு என்ன நேரும் என்பதையும் எதார்த்தத்தைக் கொண்டு விளக்கியுள்ளேன்.

ஆண்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள தலாக் உரிமை போன்றே பெண்களுக்கும் தலாக் உரிமை கொடுக்கப்பட்டுள்ளதை ஆதார அடிப்படையில் அலசி கூறியுள்ளோம்.

பெண்ணுரிமை பிரச்சனை இஸ்லாத்தின் மூல ஆதாரங்களான அல்குர்ஆன், ஹதீஸ் அடிப்படையிலேயே அலசப்பட்டுள்ளதே தவிர, வேறு எவருடைய தனிப்பட்ட கருத்தையும் ஆதாரமாக எடுக்கவில்லை. இதில் கொடுக்கப்பட்டுள்ள ஆதாரங்களில் ஏதும் தவறு ஏற்பட்டால் அதற்கு நானே பொறுப்பாகும்.

நக்கீரன் இதழை கண்டதும் உடனடியாக மறுப்பு கொடுக்க வேண்டும் என்று முடிவெடுத்து களத்தில் இறங்கி உழைத்த நண்பர்களின் ஒத்துழைப்பு என்றும் மறக்க முடியாதது. பொருளாதார உதவி செய்தவர்களுக்கும் இறைவன் அருள் புரிவானாக.

இந்த வெளியீடு பத்திரிக்கையாளர்கள், சிந்தனையாளர்கள், டாக்டர்கள், கவிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள், இளநிலை, முதுநிலை கல்வி மாணவர்கள் மற்றும் அறிஞர்கள் எல்லோருக்கும் அனுப்பப்பட்டுள்ளன. நடுநிலையோடு இதை அணுகுபவர்கள் இஸ்லாத்தின் பெண்ணுரிமையின் சிறப்பை உணரலாம்.

இந்த வெளியீடு சம்மந்தமான விமர்சனங்கள், சாதக பாதகக் கருத்துக்கள், குற்றச்சாட்டுகள் எல்லாவற்றையும் வரவேற்கிறோம்.